பாதாள பொன்னியம்மன் கோயில்
சென்னையிலுள்ள அம்மன் கோயில்பாதாள பொன்னியம்மன் கோயில் என்ற அம்மன் கோயிலானது, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கீழ்ப்பாக்கம் நகரில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயில் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்திருந்தாலும், புரசைவாக்கம் மற்றும் கீழ்ப்பாக்கம் சந்திக்கும் எல்லையில் உள்ளதால், 'புரசைவாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. மூலவர் பெண் தெய்வமான பாதாள பொன்னியம்மன். வலது கையில் சூலமும், இடது கையில் அன்ன பாத்திரமும் கொண்டு, அம்மன் சாந்த முகம் தாங்கி அருள்பாலிக்கிறார். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வாழும் மக்களில் சில லட்சம் குடும்பங்களின் குலதெய்வமாக இக்கோயிலின் மூலவரான பெண் தெய்வமான பாதாள பொன்னியம்மன் விளங்குகிறது. இக்கோயிலினை பெண் பக்தர்கள் அதிகம் தரிசிக்கின்றனர். தினமும் கோயில் திறந்தவுடன் 'திருக்காப்பு பூசை' காலையில் சுமார் 06:15 மணி முதல் 06:45 மணி வரை நடைபெறுகிறது.



